Healthகோயம்புத்தூர்

நாளை 10ஆம் தேதி கோவையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்!


கோயம்புத்தூர் மாநகராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் கோயம்புத்தூரி மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண் 20க்குட்பட்ட கடம் கெம்பட்டி காலளி ஒக்கிலியர் காலனி 7வது வீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் எதிர்வரும் 10.012026 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது. மூக்கு தொண்டை சிகிச்சை பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை சர்க்கரை நோய் இருதய நோய், நுரையீரல் நோய் தோல் சிகிச்சை நரம்பியல் சிகிச்சை எலும்பு மருத்துவம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம் ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம் மனநல மருத்துவம் குழந்தைகள் மருத்துவம் மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளது

எனவே தமிழக அரசின் சார்பில் நடைபெறும் நலம் காக்கும் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மேற்காணும் மருத்துவப்பிரிவுகளில் உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொது மக்கள் மாணவமாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் சுவந்துகொண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை பலன்களை பெற்று பொது மக்கள் அனைவரும் நலமோடு வாழவேண்டுமென கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!