வெனிசுலா மீது தாக்குதல்: கோவையில் மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் அருகே வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதிபரைக் கைது செய்த அமெரிக்காவை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாதர் சங்கம் ஆகியோர் இணைந்து அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ட்ரம்ப் முகமூடி அணிந்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட நபரை நிற்க வைத்து தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்திக் வரும்போது வெனிசுலா நாட்டில் இருந்து தான் போதை பொருட்கள் அமெரிக்காவிற்கு வந்ததாக கூறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது ஆனால் அதிக அளவு உயர் ரக போதை பொருட்கள் புலக்கம் மற்றும் அதனால் பாதிப்பு உள்ள நாடாக அமெரிக்கா தான் உள்ளது வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளங்களை கையகப்படுத்தவே அமெரிக்கா இந்த மாதிரியான தாக்குதலை நடத்தியுள்ளது இதனை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.