கோயம்புத்தூர் மாநகராட்சியில் அதிரடி: 5 மண்டலங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஒரே நேரத்தில் தீவிரத் தூய்மைப் பணி!
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள், பயணியர் நிழற்குடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக ஒரே நேரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட 100- எண்ணிக்கையிலான வார்டு பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகள், கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்றைய தினம் (06.01.2026) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பேருந்து நிலையங்கள். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கிருமி நாசினி கொண்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக ஒரே நேரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.