க்ரைம்தமிழ்நாடு

ஆசிரியை வீட்டில் 103 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: கார் ஓட்டுநர் கைதான நிலையில் 80 சவரன் தங்க நகைகள் பறிமுதல். 

கோவை தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 103 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர்  கைதான நிலையில் 80 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 25 ஆம் தேதி குனியமுத்தூர், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடி சென்ற நிலையில் மர்ம நபர் அவரது வீட்டிலிருந்து 103 சவரன் நகையைக் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலுசார் மோப்ப நாய் உதவியுடன், தடயவியல் போலிசாரும் விசாரணை மேற்கொண்டனர்.  மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கதவின் பூட்டை உடைக்காமல் இந்தக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது போலீசாரையும் திகைக்க வைத்தது. 

தொடர் விசாரணையில்  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக இராமநாதபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கார் ஓட்டுநரைக் குனியமுத்தூர் போலிசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 80 சவரன் தங்க நகைகளை மீட்டப் போலிசார், கொள்ளை அடிக்கப் பயன்படுத்திய சாவிகள், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.  

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை என்றும், கோவை மாவட்டத்தில் பூட்டை உடைக்காமல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தடங்களைச் சேகரித்ததில் கடந்த 2024 ஆம் ஆண்டு குனியமுத்தூர் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும், 2023 ஆம் ஆண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தியின் தடயங்கள் ஒத்துபோனதால், கோவை கண்ணப்ப நகர் பகுதியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை போலிசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!