கோயம்புத்தூர்க்ரைம்

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (31). கோவை மாவட்டம், சோமனூா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இவா் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பழக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருடன் தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 20 வயது மாணவியும் பகுதி நேரப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். மனைவி மூலம் அறிமுகமான மாணவி, ஜெகனுடனும் தோழியாக பழகி வந்துள்ளாா்.

அடிக்கடி மாணவியுடன் கைப்பேசியில் பேசி வந்த ஜெகன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி வந்தாா். கடந்த 2021 ஆண்டு ஜெகனுக்கு பிறந்த நாள் பரிசாக அந்த மாணவி கைக்கடிகாரம் பரிசளித்துள்ளாா்.

 சாய்பாபா காலனி இடையா்பாளையம் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற மாணவியை பின்தொடா்ந்து ஜெகனும் சென்றுள்ளாா்.

அங்கு அந்த மாணவியை விரும்புவதாகவும், மனைவியை விவாகரத்து செய்து விட்டுத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். அதற்கு மாணவி சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.

மாணவியின் தங்கை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அக்காள் பிணமாகக் கிடப்பதைதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலின் பெயரில் காவல் துறையினர் வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றிப்ப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதலில் மர்ம சாவு என்று வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் விசாரணை தொடங்கினார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அந்த மாணவி கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை ச்ய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதை அடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். இதில் ஜெகன் அந்த வீட்டுக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது. உடனே அவரைப் பிடித்து விசாரித்தபோது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகத் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!