கோயம்புத்தூர்செய்திகள்

தற்காலிக யானைப் பாகனுடன் கொஞ்சி விளையாடும் பேரூர் கல்யாணி யானை – வீடியோ வைரல்

கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் கல்யாணி யானை தற்காலிக யானைப் பாகனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலை சிதம்பரம் எனும் திருப்பெயர் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யத் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்கள் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.திருக்கோவிலில் கல்யாணி என்ற யானையை இந்து சமய அறநிலைத் துறையினர் பாகன் ரவி  மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக யானைப் பாகன் ரவி உயிரிழந்த நிலையில் கல்யாணி யானை சோகமாக இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இறந்த யானை பாகன் ரவி அவருடைய சகோதரர் ராம்ஜி அவரை வரவழைத்துத் தற்போது தற்காலிக யானை பாகனாகக் கோவில்  நிர்வாகத்தினர் நியமித்து உள்ளனர்.

ஏற்கனவே யானைப் பாகன் ரவியுடன் இவர் இணைந்து  கல்யாணி யானையைப் பராமரித்து வந்ததால் தற்போது ராம்ஜியிடம் நெருங்கிப் பழகிகி கொஞ்சி விளையாடி வருகிறது. தற்போது இந்த வீடியோ பேரூர் பகுதியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!