புதிய தொழிலாளர் சட்டம்: தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பு
புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததை TANSTIA – தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்
இது குறித்து வெளியிட்டுள்ள குறிப்பில்,
புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்ததை நாங்கள் வரவேற்கிறோம். 29 தனித்தனியான சட்டங்களை 4 முக்கிய குறியீடுகளாக ஒருங்கிணைத்தது தொழிலும் தொழிலாளர்களும் பயனடையும் முன்னேற்றமான மாற்றமாகும்.
முக்கிய நன்மைகள்:
- அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை (Appointment Order) வழங்கல்.
- 10 பேருக்குக் குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் ESI வழங்கப்பட்டு, அதிகமான தொழிலாளர்கள் காப்பீட்டின் கீழ் வருதல்.
- ஒரே ஆண்டில் 30 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலுமே Bonus பெறும் உரிமை.
- உரிமம் (Licence) பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில் செய்வது மேலும் வசதியாகிறது.
- 40 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை கட்டாயம்; எதிர்காலத்தில் இது மேலும் விரிவாக்கப்படும்.
- அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது கட்டாயம்.
- ஒரு வருட சேவை முடித்தாலே Gratuity பெறும் உரிமை.
- இந்திய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச சம்பள அமைப்பு, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் குழப்பத்தை நீக்குகிறது.
இந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதோடு, தொழில் வளர்ச்சி, வெளிப்படைத் தன்மை, மற்றும் வேலை வாய்ப்பின் முறையான அமைப்புகளை அதிகரிக்க உதவுகின்றன.