சிறுமியைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் தந்தை வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் குடித்து விட்டு வந்து அவரைப் பலாத்காரம் செய்தார். இதுபற்றித் தாயிடம் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார் என்று கூறி உள்ளார்.
அதன் பேரில் போலீசார் சிறுமியின் தந்தை மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் சிறுமையை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.