கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு நிச்சயமாகக் கொண்டு வரும் – ஜி.கே.வாசன்
கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு நிச்சயமாகக் கொண்டு வரும் எனத் தமாகத் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தாமக தலைவர் ஜி.கே வாசன் கோவை விமான நிலையம் வந்தார். முன்னதாகச் செய்தியாளர்களிடம் ஜி.கே வாசன் கூறும்போது: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் குறித்து தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், அறிந்தும், அறியாமலும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மக்களைக் குழப்ப நினைக்கிறார்கள்.
தேர்தல் ஒரு மாநிலத்தில் நியாயமாக நடக்க வேண்டும், மக்கள் விரும்பும் ஆட்சியாளர்களை முறையாகத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்றால் எஸ்.ஐ.ஆர் மிக அவசியம் அந்தப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கட்சிகள் முதல் அணியாக வெற்றி அணியாக மக்களைச் சந்தித்து கொண்டிருக்கிறோம். வெற்றியும் பிரகாசமாக உள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் மத்திய அரசு கொண்டு வரும், தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு நிலைகளில் மத்திய அரசு துணையாகச் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறது. மெட்ரோ திட்டத்திற்கான கூடுதல் தகவல்களைத் தான் மத்திய அரசு கேட்டுள்ளது தவிர மெட்ரோ திட்டத்தை ஒருபோதும் அரசு விலக்காது.
காரணம் முதல் மெட்ரோ திட்டத்தைச் சென்னைக்கு கொண்டு வந்தது என்.டி.ஏ அரசு, பிரதமர் தான். தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சியில், பல துறைகளில் மத்திய அரசு அக்கறை கொண்டதாகச் செயல்பட்டிருக்கும்போது, இது போன்ற செய்திகளைத் தமிழக அரசு திரித்துச் சொல்கிறது. குறிப்பாகப் பிரதமர் வரும்போது திரித்துப் பேசுவது ஏற்புடையது அல்ல. மக்கள் தமிழக அரசை நன்கு புரிந்து அறிந்து வைத்துள்ளனர்.
பிரதமரின் இன்றைய வருகை விவசாயம் சார்ந்த வருகை, இது இந்திய விவசாயிகளுக்கு மிகப்பெரிய பெருமை சேற்கிறது என்றார்.