திரை கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? “No Comments” – ரஜினிகாந்த்
திரை கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்ற கேள்விக்கு “No Comments” என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துச் சென்றார்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெறும் ஜெயிலர் – 2, படப்பிடிப்பிற்காகச் சென்னையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் நடைபெற்ற விமான பயணிகள் தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர், அங்குப் படுகர் இன நடனமாடிய கலைஞர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த பிரதமர் மோடி படத்துடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்: ஜெயிலர்-2 திரைப்பட சூட்டிங் பணிக்காக பாலக்காடு செல்கிறேன். ஆறு நாட்கள் ஷூட்டிங் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஜூன் மாதத்திற்கு பின்னர் திரைப்படம் வெளியாகலாம் என கூறினார்.
அப்போது திரை கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்ற கேள்விக்கு “No Comments” என பதில் அளித்துவிட்டு சென்றார். கோவை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.