ஊருக்குள் உலா வரும் காட்டுயானையை பிடிக்க கும்கி வரவழைப்பு!
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விளைப்பொருட்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையைப் பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் ரோலக்ஸ் என்ற கட்டு யானை அங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்தி அச்சுறுத்தி வருகிறது.
தொடர்ந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ரோலக்ஸ் காட்டு யானையைப் பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் ரோலக்ஸ் காட்டு யானையைக் கட்டுப்படுத்த டாப் சிலிப் யானைகள் முகாமிலிருந்து 2 கும்கி யானைகள் கடந்த சனிக்கிழமை வரவழைக்கப்பட்டது. இதனிடையே யானை பப்பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனால் மதுக்கரை வெள்ளப்பதி வனப்பகுதியில் உள்ள யானையைத் தாளியூர் அருகே விரட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ரோலக்ஸ் யானையைப் பிடிக்கக் கபில்தேவ் என்ற மேலும் கும்கி யானை வால்பாறை யானை முகாமிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.