கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு: வரும் 12இல் பெருங்கழிவு உருவாக்குபவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகள் துணை விதிகள் 2016ன் படி நாள் ஒன்றுக்கு சுமார் 10 கிலோவிற்கு மேல் கழிவுகளை உருவாக்குபவர்கள் மற்றும் சுமார் 5000 சதுரடிக்கு மேலுள்ள அனைத்து வளாகங்கள் மற்றும் நிறுவனங்கள் பெருங்கழிவு உருவாக்குபவர்கள் (BULK WASTE GENERATORS) என்று அறிவிக்கப்பட்டு மேலும் அவர்கள் தங்கள் கழிவுகளைத் தங்கள் இடத்திலோ அல்லது மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள EMPANELED AGENCIES-யிடமோ ஒப்பந்தம் மேற்கொண்டு அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், தங்கள் கழிவுகளை மக்கும் கழிவுகளாக மாற்றி உரமாக்குதல் மற்றும் மக்காத கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருங்கழிவு உருவாக்குவர்கள் (BULK WASTE GENERATORS) எவ்வாறு கையாள வேண்டும் என்று கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து வரும் 12.09.2005 வெள்ளிக் கிழமை அன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

எனவே அனைத்து பெருங்கழிவு உருவாக்குவர்கள் (BULK WASTE GENERATORS) தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் திடக்கழிவுகளை சரியான முறையில் கையாளுபவர்கள் மற்றும் ORGANIC WASTE CONVERTOR பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடுபற்றிய இயந்திர உற்பத்தியாளர்கள் தங்களது திடக்கழிவு முறையினை காட்சிபடுத்த விருப்பமுள்ளவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டலம் -89259 75980, மேற்கு மண்டலம் -89259 75981, மத்திய மண்டலம் 89259 75982, தெற்கு மண்டலம் 90430 66114, கிழக்கு மண்டலம் 89258 40945 என்ற தொலைபேசி எண்கள் வழியாக 09.09.2025 பிற்பகல் 3.00 மணிவரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!