கோயம்புத்தூர்பொழுதுபோக்கு

கல்லூரி காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன் – சிவகார்த்திகேயன்

கல்லூரி காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன் என்று கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பேசினார்.

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராகச் சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில், வெளியாகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ருக்குமணி ஆகியோர் கலந்து கொண்டு படத்தில் நடித்த அனுபவங்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் வாயிலாக, மாணவ மாணவியர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், மதராஸி படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் 3 வருடங்களுக்குப் பிறகு நானும் அனிருத்தும் இந்தத் திரைப்படத்தில், இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கல்லூரி காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களால் தான், இந்த இடத்திற்க்கு தான் வந்துள்ளதாகவும், கல்லூரி நண்பர்களுடன் இன்றும் இணைந்தே பயணிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், மனித வாழ்க்கையில் காதல் எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான், இந்தப் படத்திலும் காதலை மையமாக வைத்துத் திரைக்கதையை தேர்வு செய்து படமாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது படத்தின் ஒரு பாடலுக்குக் கல்லூரி மாணவர்களுடன் நடனம் ஆடிக் கல்லூரி மாணவர்களை உற்சாகப் படுத்தினார் மேலும் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கும் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!