வெள்ளப்பெருக்கு காரணமாகக் கோவை குற்றாலம் அருவி மூடல்!
தொடர் மழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 7 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.