கோவை ரயில் நிலையத்தில் மேம்பட்டுப் பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்!
கோவை ரயில் நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோவை எம்.பி., ரயில்வே கோட்ட மேலாளர், ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல், அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துதல், மற்றும் கூடுதலான ரயில்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கணபதி ப. ராஜ்குமார் கூறியதாவது: கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கோவையிலிருந்து மதுரை மார்க்கமாகத் தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் ரயில், கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் தினசரி ரயில் ஆகியவை கூடுதலாகக் கேட்கப்பட்டது.
மேலும் கோவை – சேலம் மெமு ரயில்கள், பொள்ளாச்சி கோவைக்கும் ரயில்கள் வேண்டுமெனக் கேட்கப்பட்டது. அடிப்படை வசதிகளான கழிவறைகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் ஆகியவை கூடுதலாக வேண்டும் என மக்களின் சார்பில் வைத்தோம்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிருந்து புறப்படும் ரயில்கள் சிலவற்றை வடகோவை, போத்தனூருக்கு மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என ஆலோசிக்கப்பட்டது.
டைடல் பார்க் அருகிலும் ரயில் நிலையம் வேண்டும், அதுகுறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். மேலும் கோவையிலிருந்து திருச்சி மார்க்கமாக வேளாங்கண்ணிக்கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே போலீசாரின் எண்ணிக்கையைக் கூடுதலாகத் தேவை, காவலர்களுக்காக உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தா