வேளாண்மைப் பல்கலை.யில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2025 – 2026 துணை இணையதள விண்ணப்ப முகப்பு திறக்கப்பட்டு உள்ளது.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு 2025 – 2026ஆம் கல்வியாண்டிற்கு மேல் நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டயப் படிப்பு பாடப் பிரிவில் விண்ணப்பிக்க இணையதள முகப்பு (Application Portal) திறக்கப்பட்டது.
இன்று முதல் 29.08.2025 வரை இந்த முகப்பு திறந்து இருக்கும். விண்ணப்பதாரர்கள் http://tnau.ucanapply.com என்ற இணைய தளத்தின் மூலமாகத் துணை இணையதள விண்ணப்பத்தினை (SUPPLEMENTARY ONLINE APPLICATION) பூர்த்தி செய்யலாம்.
மேலும் துணை இணையதள விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் படி ஏற்கனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பித்துத் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பொது விண்ணப்பித்தினை இடை நிறுத்திய மற்றும் சமர்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துணைத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கென்று தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இந்தத் துணைத் தேர்வாளர்கள் ஏதேனும் தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது மேலே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினாலோ அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி 29.08.2025 ஆகும்.
மேலும் விபரங்களுக்குத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகளையும் (உறுப்பு மற்றும் இணைப்பு), வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களையும் அணுகலாம் என்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email) : ugadmissions@tnau.ac.in மூலமாகவும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம் என்றும் பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.