இரவு ரோந்து பணியில் திருடனை மடக்கி பிடித்த”SMART KAKKI’S” காவலர்கள்..!
கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KAKKI’S ” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களைப் பணியில் அமர்த்தியுள்ளார்.
இதில் இன்று அதிகாலை அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த “SMART KAKKI’S” கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபொழுது அந்த வழியாக இருசக்கர வாகனம் சந்தேகத்திற்குரிய வகையில் சென்றதால் அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்து அந்த நபரை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து விசாரணை செய்ததில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகேசன் (36) என்பதும், கோவை மாநகர ஆவாரம்பாளையத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் இவர்மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
இந்நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் மேற்படி நபரைக் கோவை மாநகர காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இரவு ரோந்து பணியில் திறம்பட செயல்பட்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை மடக்கி பிடித்த ரோந்து காவலர் தாமோதரன்(PC 968) மற்றும் கோவிந்தராஜ்(HG 140) ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.