FashionLifestyle

“ஹக்கா குஷின்” என்ற சைனீஸ் உணவுத் திருவிழா!

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் “ஹக்கா குஷின்” என்ற சைனீஸ் உணவுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும், தனியார் நட்சத்திர விடுதி உணவகத்தில் “நூடுல்ஸ் அல்லாத சைனீஸ் உணவுகள்” என்ற முறையில் “ஹக்கா” என்ற சைனீஸ் சமூகத்தின் கைவண்ணத்தில் தயாரிக்கும் உணவுகள் திருவிழா துவங்கியுள்ளது.

இதில் 15 வகையான “ஹக்கா” உணவுகளைத் தயாரித்து வழங்கச் சீனாவை சேர்ந்த மூன்றாம் தலைமுறை ஹக்கா சமூகத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் கேத்தரின் தயாரிக்க உள்ளார்.

மேலும் வழக்கமாகச் சைனீஸ் உணவு வகைகள் என்றால் நூடுல்ஸ் தான் நினைவுக்கு வரும் ஆனால் அவ்வாறு இல்லாமல்  சைவ, அசைவ வகை உணவுகளை ஹக்கா சமூக முறைப்படி தயாரிக்க உள்ளனர். 

இதுகுறித்து அஜித்  ஜனார்த்தனன் கூறும்போது:

ஹக்கா என்பது சீனா நாட்டில் உள்ள ஒரு நாடோடி சமூகமாகும். இவர்கள், ஒரே இடத்தில் தங்காமல் இடம் மாறிக் கொண்டே இருந்தனர். அப்போது தாங்கள் செல்லும் இடங்களில் கிடைக்கும் காய்கறிகள், சமையல் பொருட்கள், இறைச்சிகள் உள்ளிட்டவற்றை பயன்டுத்தி, ‘ஹக்கா’ வகை உணவுகளைத் தயாரித்தனர்.

இந்த ஹக்கா வகை உணவுகள் உலகளவில் பிரபலமானதாகும். பல்வேறு நாடுகளில் இந்த உணவு முறை உள்ளது. எங்கள் உணவகத்தில் உள்ள ‘சின் சின்’ என்ற சைனீஸ் வகை உணவகம் இயங்கி வருகிறது.

இந்த உணவகத்தில், ஹக்கா உணவு முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைக் கொண்டு ‘ஹக்கா குஷின்’ என்ற உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் 24-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

ஹக்கா உணவு முறையில் தயாரிப்பில் பிரபலம் வாய்ந்த, சீனா நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டவரும், தற்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவருமான செஃப் கேத்தரின் மூலம் இந்த உணவு முறைகள் தயாரித்து வழங்கப்படுகிறது.

இவர், மூன்றாவது தலைமுறையாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதில், உலகளவில் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹக்கா முறையிலான 15 வகையிலான உணவுகள் தயாரித்து வைக்கப்பட உள்ளன.

மேற்கண்ட 5 நாட்களுக்குத் தினமும் 12.30 மணி முதல் 3 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 11 மணி வரையும் ‘ஹக்கா குஷின்’ உணவுத் திருவிழா நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

குறைந்தபட்சம் ரூ.450 முதல் உணவுக்கான கட்டணம் தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!