குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய் – உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள்
கோவை மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமோ ரயிலில் வந்த 2 வயது குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாயை வெளியே எடுத்து குவிந்து வருகிறது.
கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து போத்தனூர் வரை இயக்கப்படும் மெமோ ரயிலில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று மதியம் ஒரு மணியளவில் கோவை நோக்கி வந்த ரயிலில் தேவ் ஆதிரன் (2) என்ற குழந்தை தனது தாயுடன் வந்துள்ளார்.
அப்போது கோவை அருகே வந்தபோது குழந்தை தேவ் ஆதிரன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மிட்டாய் அவனது தொண்டையில் சிக்கியது. இதையடுத்து குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மூக்கில் ரத்தம் வலிய ஆரம்பித்தது.
இதையடுத்து சகுழந்தையின் தாய் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ரயில்வே போலீசார் சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த மிட்டாயை அகற்றினர்.
இதையடுத்து குழந்தையை சமாதானப்படுத்திய போலீசார் கோவை வந்ததும், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நலம் சீராக உள்ளது எனக் கூறியதை தொடர்ந்து குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.