துணைக் குடியரசு தலைவராகப் பொருப்பேற்க உள்ள சி.பி.ராதகிருஷ்ணனுக்கு வாழ்த்து – வைகோ
துணைக் குடியரசு தலைவராகப் பொருப்பேற்க உள்ள சி.பி.ராதகிருஷ்ணனுக்கு மதிமுக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அதே வேலையில் இந்தியா கூட்டணியின் முடிவைத் தான் பின்பற்றுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை சூலூரில் நடைபெறும் மதிமுக கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பேரறிஞர் அண்ணா 117 -வது பிறந்த நாள் விழா மாநாட்டைத் திருச்சியில் செப்.15 ல், மிகப் பிரமண்டமாக நடத்த உள்ளோம். 1995 -ல் நடந்தது போலச் சரித்திர மாநாட்டை மீண்டும் நினைவூட்டுவதை போல இந்த மாநாடு அமையும்.
கடந்த ஆண்டு மதிமுக தோழர்கள் நடத்திய போராட்டத்தின் காரணத்தால் கோவை – நாகர்கோவில், பாலக்காடு – திருச்சி செல்லும் பயணிகள் விரைவு ரயில்கள் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்கிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து வரும் காரணத்தால் மீண்டும் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.
பாலஸ்தீனம், காசாவில் 1.65 லட்சம் பேர் இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள். மேலும் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் உணவு கூட இல்லாமல் இனப்படுகொலை நடத்தப்படுகிறது, இதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம்.
நேரு காலத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து டெல்லியில் அவர்களுக்குத் தூதரகம் அமைத்துக் கொடுத்த இந்திய அரசு, இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதனைத் தடுத்து நிறுத்தப் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலஸ்தீனத்தை முழுமையாகச் சுதந்திரம் பெற்ற அரசாக நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனக் கூறி,ஐ.நாவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சி, எனக்கு நல்ல நண்பர். வாஜ்பாய் வந்தபோது பெரும் கூட்டம். 1998 -ல் நாடாளுமன்ற தேர்தலில் போது அதிமுக, பாஜகவுடன் மதிமுக கூட்டணியில் இருந்தது.
அப்போது கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் பிரச்சாரத்திற்கு வராதபோது, சி.பி.ஆரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தேன். அதன் விளைவாக இள.கனேசன், முன்னனி தலைவர்கள் நன்றி தெரிவித்தார்கள். சி.பி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
மும்பை ஆளுநராகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தார். இந்திய துணை குடியரசு தலைவராக, தாய் தமிழகத்தை சேர்ந்தவரும், கொங்கு மண்டல பிரதிநிதிபோல அரசியல் நடத்திய அவர் துணை குடியரசு தலைவராகப் பொருப்பேற்க இருப்பது மதிமுக சார்பில் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
துணை குடியரசுத் தலைவர், ஒரு வேலை அடுத்த கட்டத்தில் குடியதசு தலைவராகக்கூடும், கட்சி எல்லைகளைக் கடந்து, நம் தாய் தமிழ்நாட்டின் தமிழர், நல்ல பண்பாளர், அவருக்கு வாழ்த்துகள்.
பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடி ஒரு ஜனநாயக படுகொலை, தேர்தல் ஆணையம் அது உண்மை இல்லையெனச் சமாதானம் கூறுகிறது. ஆனால் இந்தியா கூட்டணியினரிடம் ஆவணங்களும், ஆதாரம் உள்ளது.
இது ஜனநாயகத்தை கருவருக்கும் வேலை, இப்படிபட்ட மோசடி இந்தியாவில் நடந்த்து இல்லை. இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியினர் போராடி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி முடிவுகுறித்து நான் யூகிக்க முடியாது. நண்பர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் வாழ்த்து கூறினேன்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், திமுக, முதல்வர்மூலம் கூறும் அறிவிப்பின் படி மதிமுக நடந்மு கொள்ளும். திமுக எடுக்கும் முடிவை ஏற்றுகொள்வோம். தூய்மை பணியாளர்கள் அதே பணியைச் செய்யக் கூடாது என்பது எனது கருத்து. குல கல்வி போல இது சமூக நீதிக்கு எதிரானது எனக் கூறினார்.