இந்தியாஉலகம்விளையாட்டு

ஆஸ்திரேலியா பேகா ஓபன் ஸ்குவாஷ் – இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை.

என்.எஸ்.டபிள்யூ பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் பேகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் நூர் கஃபாகியை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 17 வயதான அனஹத் சிங் 3-2 (10-12, 11-5, 11-5, 10-12, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் அனஹத் சிங், எகிப்தின் ஹபீபா ஹானியுடன் மோதுகிறார். ஹபீபா ஹானி தனது அரை இறுதியில் 3-1 (11-9, 7-11, 12-10, 11-6) என்ற செட் கணக்கில் இந்தியாவின் அகன்க்‌ஷா சலுங்கேவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!