ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தைப் பார்க்க ஊழியர்களை விடுமுறை அழைத்து வந்த உரிமையாளர்..!
கோவையில் “கூலி” திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக, தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துச் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இணைந்து உரிமையாளரும் கூலி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டாடினார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, “கூலி” திரைப்படத்திற்கு அழைத்து வந்து ஊழியர்களுடன் சேர்ந்து திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் முரளி கூறும்போது: இன்று கூலி திரைப்படத்தைப் பார்க்க எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளித்து, அனைத்து ஊழியர்களுடனும் திரைப்படத்தைப் பார்த்துள்ளோம். படம் எங்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய உள்ளது. மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை நிரூபித்து விட்டார்.
வழக்கம்போல் சூப்பர் ஸ்டார் என்ட்ரி முதல் படம் முழுவதும் கலக்கியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.