போர்களற்ற உலகை உருவாக்குவோம் – சிபிஎம் உறுதி மொழி
போர்களற்ற உலகை உருவாக்குவோம் என்ற வகையில் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஆகஸ்ட் 6 மற்றும் 9 -ல் ஜப்பானில் அணுக் குண்டு வீசப்பட்ட நினைவு நாளை முன்னிட்டு, கோவை 100 அடி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் “போர்களற்ற உலகை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதகுலத்தை நாசமாக்கும் அணு ஆயுதங்களை ஒழிப்போம், ஏகாதிபத்தி நாடுகளின் போர் வெறியை எதிர்ப்போம், போர்களற்ற உலகை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து கனகராஜ் கூறும்போது: 2 ஆம் உலக போர் முடிவுக்கு வரும் நிலையில் இருந்தபோது ஆயுத விற்பனைக்காக ஜப்பான் மீது அணுக் குண்டுகள் வீசப்பட்டு பேரழிவு நடந்தது.
சுமார் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர், இன்றளவும் பாதிப்பு உள்ளது. அணு ஆயுதம் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இன்றைய தினம் அணு ஆயுதத்தை எதிர்த்தும், போர் வேண்டாமென வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.
மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வேண்டும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திகிறோம் என்றார்.