மக்கள் பிரச்சினையை தீர்க்காமல் மன்னர் – இளவரசர் போல் செயல்படுவதா? – வானதி சீனிவாசன் கண்டனம்
கோவை மக்கள் சேவை மையம் சார்பாக சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா கோவை, வடவள்ளி வனவாசி சேவா கேந்திரத்தில் நடைபெற்றது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், M.L.A கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறும்போது :- வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பாரத பிரதமர் மோடி அவர்கள், கூறுவது சமுதாயத்தில் பாதியாக இருக்கக் கூடிய பெண்களுடைய முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது. ஒரு வீட்டிற்கும் சரி, நாட்டிற்கும் சரி பெண்களுடைய முன்னேற்றம் அவர்களுடைய வளர்ச்சி என்பது அவசியமானது, அடிப்படையானது.
அந்த வகையில் கோவை மக்கள் சேவை மையம் பெண்களை தொழில் முனைவோராக மாற்றுகின்ற வகையில் சுயம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்றவர், இந்த திட்டத்தின் வாயிலாக 1500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து தையல் இயந்திரம் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
மக்கள் பிரச்சினையை தீர்க்காமல் மன்னர் – இளவரசர் போல் செயல்படுவதா? , கட்டுப்பாடற்று கிடக்கிறது காவல் நிலையங்கள்: கட்டுப்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன்
மேலும் அவர்களெல்லாம் சொந்த காலில் சுதந்திரமாக சம்பாதிக்கக் கூடிய வகையில் இதை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு 1500 பேருக்கு இலவச பயிற்சியையும் இலவச இயந்திரத்தையும் கொடுப்பதற்கு 17 மையங்களில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
இன்று துவங்கப்பட்டு இருக்கக் கூடிய இந்த பயிற்சி வடவள்ளி பகுதியில் இருக்கக் கூடிய பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி கொடுத்து பயிற்சி முடிந்ததற்கு பின்பாக மத்திய அரசாங்கத்தின் சமத் திட்டத்தின் மூலமாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தோடு இணைந்து இந்த பயிற்சியை தொடங்கி இருப்பதாக கூறியவர், அந்தத் திட்டத்தினுடைய சான்றிதழ்களை அவர்கள் பெறுகிறார்கள்.
அப்படி பெரும் போது மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் கடன் உதவியை எளிதாக பெற முடியும். அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறோம் என்றார்.
மேலும் அது மட்டும் இல்லாமல், இலவச தையல் இயந்திரத்தையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது எனவும், சுயம் திட்டத்தின் வாயிலாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய பெண்கள் புதிய வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இதை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டாக்குடி கிராமம் பற்றிய கேள்விக்கு,
இந்தியாவிலேயே ஒரு முன்னேறிய மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு இன்றைக்கு, என் பகுதியில் இருக்கக் கூடிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த கிராமமும் காலி செய்து இருக்கிறது என்றால் மிகப்பெரிய அவமானமாக நான் இதை கருதுகிறேன்.
ஒருபுறம் மிக வேகமாக நகர் மையமாகிக் கொண்டு இருக்கிறது, மறுபுறம் அதிகமாக தொழில் மையமாகிக் கொண்டு இருக்கிறது.
இப்படி இருக்கக் கூடிய இந்த மாநிலத்திலேயே ஒரு குக் கிராமத்தில் இது தான் சூழல் என்றால் அரசாங்கத்தினுடைய கவனம் எப்படி? பரவலாக சென்று சேராமல் இருக்கின்றது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ? அங்கெல்லாம், மன்னராக அப்பாவும், இளவரசனாக மகனும் இந்த தமிழ்நாடே ஏதோ? தங்களுக்கு தான் சொந்தம் என்பது போல பாவனைகள் இருக்கிறதே தவிர.
அவர்களுடைய அரசாங்கம் அனைவருக்கும் மன அரசாங்கம் இல்லை என்பதற்கு இதில் இருந்து தெரிய வருகிறது.
அந்த கிராமத்தில் எதற்காக ? மக்கள் இப்படி காலி செய்து சென்று இருக்கிறார்கள், அவர்களின் தேவைகள் என்ன ? என்பதை மாவட்ட ஆட்சியர், மாநில முதலமைச்சர் ஆகியோர் அதில் கவனம் செலுத்தி கிராமத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை பா.ஜ.க சார்பாக கோரிக்கையாக முன் வைக்கிறேன்.
அதேபோல காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதல் தற்கொலை, காவல் நிலைய அதிகாரிகள் மீது தி.மு.க கட்சிக்காரர்கள் தாக்குதல், காவல்துறை சுதந்திரமாக செயல்படாததால் நிறைய கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிறது.
சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் சென்று கொண்டு இருக்கிறது எனக் கூறினார்.