கோவை மாநகராட்சியில் 108 ஆம்புலென்ஸ் ஓட்டுநர்களுக்கு ஓய்வறை.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயரின் ரூ.1 கோடி உரிமை தொகையிலிருந்து மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களர், உதவியாளர்களுற்கு ஓய்வறை அமைத்துத் தரப்படும் என அறிவிப்பு வெளியிட்ட மேயர் ரங்கநாயகியை நேரில் சந்தித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேயரின் உரிமை நிதி ரூ.1 கோடியிலிருந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்காகக் கழிவறை, குளியலறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.
தொடர்ந்து அதற்கான சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாநகராட்சி மேயர் ரங்கநாயகியை நேரில் சந்தித்து தங்களுக்கான ஓஆய்வு அறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது பேசிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோவை மண்டலத்தில் 66 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அதில் 100 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் கூறினர்.
தற்போது வரை தங்களுக்கான ஓய்வறை என்பது இல்லாமல் இருக்கக்கூடிய சூழலில் குளியலறையுடன் கூடிய ஓய்வறை கட்டித் தரப்படும் என மேயர் அறிவித்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதன் காரணமாகவே அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேபோல் நேற்றைய தினம் வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்புக்கு ஏற்ப விரைவில் ஓய்வறைகள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துவங்கும் எனக் கூறிய மேயர் ரங்கநாயகி, விரைவில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஐந்து மண்டலங்களிலும் ஓய்வறைகள் எங்கு அமைக்கலாமென ஆலோசித்து அங்குக் கட்டுமான பணிகள் துவங்கும்,
கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலென்ஸ் திட்டத்தின் மூலம் கடுமையாக உழைத்து வரும் ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும், பணிகள் நிறைவடைந்த பின் முதல்வரிடம் நேரம் கேட்டு அவரது கையால் திறக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.