தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் – உயிர்ம வேளாண்மை பயிற்சி.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் வருகின்ற ஆகஸ்ட் 7 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் உயிர்ம வேளாண்மை கட்டண பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் பயிற்சிக்கான கட்டணமாக ரூபாய் 750 செலுத்த வேண்டும். முன்பதிவு செய்ய மையத்தின் தொலைபேசியில் (0422 2455055 /6611206) தொடர்பு கொண்டோ அல்லது பயிற்சிக்கு நேரடியாக வந்தோ பதிவு செய்து கொள்ளலாம்.
மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உயிர்ம வேளாண்மை பற்றிய அனைத்து செய்திகளும், தொழில்நுட்பங்களும் செய்முறை வாயிலாக கற்றுத்தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உயிர்ம வேளாண்மை பற்றிய புத்தகமும், பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.