கோவையில் புது பொலிவுடன் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை!
கோவையில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் மேம்பாலத்தில் மீண்டும் நிறுவப்பட்டது.
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் கடந்த ஜன.2 ஆம் தேதி எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது.
அப்போது மீட்பு பணிகளுக்குத் தடையாக இருந்ததால் அங்கிருந்த 4 அடி திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் சிலையைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
பின்னர் சிற்பக் கலைஞர்கள் சிலையைப் புதிதாகப் புணரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
அந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பான முறையில் நிறுவப்பட்டது.
மேலும் சிலை அமைந்து உள்ள இடம் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.