கோவையில் நடைபெற்ற கவிதை பயிலரங்கம்..!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கவிதை பயிலரங்கம் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவிகளுக்கான கவிதை பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய இந்தக் கவிதை பயிலரங்கத்தில் தமிழ் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சங்ககாலம், சம கால கவிதைகள்குறித்து எஸ்.எஸ்.வி.எம்கல்வி நிறுவனங்களின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வெ.மைதிலி உரையாற்றினார். தொடர்ந்து எது கவிதை? என்ற தலைப்பில் கவிஞர் சுடர்விழி எடுத்துரைத்தார்.
பின்னர் நவீன கவிதைகளின் கட்டமைப்பு என்ற தலைப்பில் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் கு.இலக்கியன் பேசினார். மேலும் தமிழ் துறை மாணவிகளுக்கு எழுந்த கவிதை தொடர்பான சந்தேகங்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் தி.மணி, மாவட்டச் செயலாளர் அ.கரீம், மாவட்ட குழு நிர்வாகிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.