வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு!
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர் அப்துல் சமது, கே ஆர் ஜெயராம், அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, எஸ் சேகர், சட்டப்பேரவை துணை செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தாவரவியல் பூங்காவில் உள்ள செடி கொடிகள் பற்றியும் தற்பொழுது தாவரவியல் துறையில் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களிடம் அவர் கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா.கிரியப்பனவர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை, கூறியதாவது: காலை முதல் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்தோம். புற்றுநோய் பரிசோதனையில் முதல் மாவட்டமாகக் கோவை மாவட்டம் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆய்வுகள் மேற்கொள்ளும்போது குறைகளையும், குற்றங்களையும் கணக்காயர்கள் தொடர்ச்சியாக முன் வைக்கின்றனர். அதனை எல்லாம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.