கோவையில் நடைபெற்ற குறுமைய சிலம்பம் விளையாட்டுப் போட்டி!
*மூன்று தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு*
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாகப் பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாகக் கோவையில் குறுமையை அளவில் நடைபெற்று வரும் போட்டிகளில் தடகளம் மற்றும், கராத்தே, சிலம்பம், கால்பந்து, கைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.குளம் குறுமைய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், கோவை புறநகர் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வயது அடிப்படையில் ஒற்றை கொம்பு, இரட்டை கம்பு, நடுக்கம்பு எனப் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று தங்கம் ஐந்து வெள்ளி ஒரு வெண்கலம் என ஒன்பது பதக்கங்கள் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.
இந்நிலையில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை பாராட்டிய சக மாணவர்கள் கைகளைத் தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் கலந்து கொண்ட பள்ளியின் தாளாளர் ஹெரால்டு ஷாம் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என ஒன்பது பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.