அரசியல்தமிழ்நாடு

பாஜக – அதிமுக கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணி – ஜவாஹிருல்லா

பாஜக – அதிமுக கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணி,  திட்டம் இல்லாமல் எதைப் பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத  வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கோவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ஒன்றிய பாஜக அரசு பீகாரில் குறுகிய கால  வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி செய்கிறது. இது அங்கு அதிர்ப்தியை  ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ்ரீ யாதவ், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவரகள் எதிர்த்துள்ளது.

நாடாளுமன்றத்திலும்  சில நாட்களாகக் கூச்சல் குழப்பங்கள்  எழுந்துள்ளது. இதே அடிப்படையில் நாடு முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்  பணிகளை மேற்கொள்ள உள்ளதாக எனத் தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

இந்தப் புதிய முறையில் பல்வேறு ஆவணங்களைக் கேட்கிறார்கள். இது NPR மற்றும் NRC யை ஆகியவற்றை மறைமுகமாக ஒன்றி பாஜக அரசு கொண்டு வரத் தேர்தல் ஆணையத்தைக் கையில் எடுத்து செயல்படுவதாக முயல்கிறதோ என்ற அச்சம் மக்களுக்கு  ஏற்பட்டுள்ளது.

*தமிழகத்தில் நடைபெற உள்ள  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்தியா கூட்டணி கட்சியினர் உற்று கவனிக்க வேண்டும்*

பீகாரை தொடர்ந்து 2026 -ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில்,  தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செய்ய வேண்டும். மராட்டியத்தியத்தில் புதிதாக லட்சக்கணக்கான வாக்காளர்களை  சேர்த்து பாஜக அங்கு வெற்றி பெற்றது.

இப்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்கி விட்டு வெற்றி பெற பாஜக முயல்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. 

 திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் இதில் விழிப்புணர்வுடன் இருந்து பீகாரில் நடந்தது போல தமிழகத்தில் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்.

தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று பள்ளிவாசல் மற்றும் அடக்க தளங்களை அமைப்பது தொடர்பாக தடைகளை நீக்கி, சட்டமன்ற மூலம் சிறப்பான அறிவிப்பை வழங்கி, அரசாணை வெளியிட்டது.

ஆனால் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிவாசல் மற்றும் அடக்கு தளங்களை அமைக்க இடர்பாடுகளை செய்து வருகின்றனர்கள், அதனை கலைய வேண்டும்.  

முதலமைச்சரில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள சூழலில், அதிமுக அதே போன்ற பிரச்சார பயணத்தை துவங்கியுள்ளனர்.

ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த போது எப்படி ஒன்றிய அரசுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை.  இப்போது பாஜக ஆதரவோடு வலம் வருவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு பேச வேறு சப்ஜெட் இல்லை அதனால் தான்  முதலமைச்சர் பற்றி மட்டும் தான் பேசுகிறார்.

தமிழக முதல்வர் விரைவில் குணமாகி மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என பிராத்தனை செய்கிறோம். மருத்துவமனையில் இருந்த போதும் கடமை தவறாமல் ஆட்சி குறித்த பணிகளை செய்து வருகிறார். 

தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, மக்களுக்கு விரைவில் தங்கள் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாகத்தான் முதலமைச்சரை மையப்படுத்தி அதிமுக பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது.

கடந்த ஜூலையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி மாநாட்டை நடத்தினோம்,  உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியர்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்.  ஒன்றிய அரசு கொண்டுவந்த வகுப்பு திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் மாநாடு முடிந்த இரண்டு நாட்களில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் இஸ்லாமியர்களுக்குரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பது எங்களது கொள்கை முடிவு எனக்குக் கூறினார். இதை நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம் என்றார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி வழங்காதது குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார். 

அப்போது அரசியலைக் கடந்து மக்கள் நலனில் அக்கறையுள்ள எதிர்க்கட்சியாக அதிமுக இருந்திருந்தால் சட்டப்பேரவையில் அமர்ந்து இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்போதெல்லாம் வெளிநடப்பு செய்துவிட்டு, இப்போது பேசுகிறார்கள் தமிழக மாணவர்களின் நலனில் அதிமுகவிற்கு அக்கறை இல்லை என்பதை இது காட்டுகிறது.

ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நிதியைக் கொடுக்காமல் இருந்து வருகிறது.  அதனைத் தற்போது தமிழக அரசுதான் வழங்கி வருகிறது.  அதனைப் பாராட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்ட  மனதில்லை என்றாலும் கூட மௌனம் காக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களை மகிழ்விக்கவும்,  ஊக்கமளிக்கவும் மற்ற கட்சிகளைக் கூட்டணிக்கு அழைத்து வருகிறார்.  ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் அதிமுக கூட்டணிக்குச் செல்ல எந்த நாட்டமும் இல்லை என தெளிவாகக் கூறிவிட்டனர்.

திமுக கூட்டணியில் இல்லாத விஜய்யும் அழைப்பை  மறுத்துவிட்டார். திட்டமில்லாமல் எதை பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாமல் வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருக்கிறது.

திமுக ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகைகளில் நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக இருக்கிறது. திமுக ஆதரவோடு இருக்கக்கூடிய எந்த சிறுபான்மை கட்சியும் விஜய் பக்கம் போவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை எனது கருத்து.

முரண்பாடுகள் குழப்பங்கள் மிகுந்த கூட்டணி அதிமுக கூட்டணி என்பதற்கு அமித்ஷா மற்றும் பழனிச்சாமி பேச்சுகளும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  தமிழகத்தை பொறுத்தளவு எப்போதும் ஒரு கட்சி ஆட்சி தான் இருந்து வருகிறது.

அந்த ஆட்சி முழு நேரமாக இருந்ததாத பகுதியில் கலைந்ததா என்பது வேற விஷயம்.  பெரும்பாலும் பல ஆண்டு காலமாக தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. 

கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்கள் இதுவரை விரும்பாத ஃபார்முலாவாக உள்ளது. திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!