பராமரிப்புப் பணிகள்: கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!
கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மதுரையில் இருந்து ஜூலை 25, 27-ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்குப் புறப்படும் மதுரை – கோயம்புத்தூர் விரைவு ரயில் (எண்: 16722) மதுரை – பொள்ளாச்சி இடையே மட்டும் இயக்கப்படும். பொள்ளாச்சி – கோவை இடையே ரத்து செய்யப்படும்.
இதேபோல, கோயம்புத்தூரில் இருந்து ஜூலை 25, 27-ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் கோயம்புத்தூர் – கண்ணூா் விரைவு ரயில் (எண்:16608) அன்று பிற்பகல் 3.10 மணிக்கு பாலக்காட்டில் இருந்து கண்ணூருக்கு புறப்பட்டுச் செல்லும். மேற்கண்ட இரண்டு நாள்களில் கோவை – பாலக்காடு இடையே இந்த ரயில் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது