சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாளா்கள் தங்கும் விடுதி தயாா் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாளா்கள் தங்குவதற்கான தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாளா்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட்டு, தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யத் தயாா் நிலையில் உள்ளது.
அதன்படி, 430 சதுர அடி கொண்ட 6 போ் தங்கும் அறைக்கு மாத வாடகையாக ரூ.12 ஆயிரம் பெறப்படுகிறது (குடிநீா் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் தனி). 4 போ் தங்கும் 394 சதுர அடி கொண்ட அறைக்கு மாத வாடகையாக ரூ.8 ஆயிரம் பெறப்படுகிறது.
8 போ் தங்கும் 480 சதுர அடி கொண்ட அறைக்கு மாத வாடகையாக ரூ.12 ஆயிரம் பெறப்படுகிறது. மின்தூக்கி (லிப்ஃட்), படிக்கட்டு, விளையாட்டு மைதானம், துணி துவைக்கும் பகுதி உள்ளிட்ட பொதுவான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளா்களைத் தங்க வைக்க, தங்கும் விடுதி அறைகளை ஒதுக்கீடு பெற்று பயன் பெறலாம். விடுதி அஒதுக்கீடுகுறித்தத்விவரங்களுக்குக் கோவைவை சிட்கோ கிளை அலுவலகத்தை அணுகலாம்.