தமிழ்நாடு

அரசு பேருந்திலிருந்து வெளியேறிய புகை: ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறிப் பயணிகள்

கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசு பேருந்தில் திடீரெனப் புகை ஏற்பட்ட நிலையில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை – பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்து ஒன்று வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலைப் பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி இயக்கப்பட்டது. பேருந்தைப் பொள்ளாச்சி நடுபுனியை சேர்ந்த சிவசுப்பிரமணி (45), என்பவர் இயக்கியுள்ளார்.

சுமார் 90 பயணிகளுடன் கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்தபோது முன் பகுதியிலிருந்து புகை வெளியேறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து உடனடியாகப் பேருந்தைச் சாலை ஓரத்தில் நிறுத்திய ஓட்டுனர் சிவசுப்பிரமணி கீழே இறங்கி சென்றார். ஆனால் பேருந்தின் கதவுகள் திறக்கப்படாததால் பயணிகள் என்ன செய்வது என்று அறியாமல், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதிக்க துவங்கினர்.

இதில் பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்ராஜ் (55), என்பவர் கீழே குதித்தபோது கால் முறிவு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அரசு பேருந்தில் கியர் பாக்ஸ் பகுதியில் உள்ள ரப்பர் சூடாகி கரும்பு கை வெளியேறிய நிலையில் பயணிகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஓட்டுநர் திடீரெனக் கீழே இறங்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!