கோவை அரசு விளையாட்டு விடுதியில் தங்கி சாதனைப் படைத்து வரும் பள்ளி மாணவர்கள்…!
கோவை அரசு விளையாட்டு விடுதியில் தங்கி சாதனைப் படைத்து வரும் பள்ளி மாணவர்கள் – அரசின் முன்னெடுப்பால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்குச் சர்வதேச போட்டிகளுக்கும் தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை சார்பில் சென்னை, கோவை, மதுரை, நெல்லையென 19 மாவட்டங்களில், 11 மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும், 7 பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.
விளையாட்டில் ஆர்வம் உள்ள பள்ளி குழந்தைகளுக்குத் தரமான உணவு, விளையாட்டு தளவாடங்களும், பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட அளவிலான நேர்முக தேர்விலும், சென்னையில் நடைபெறும் இரண்டாம் கட்ட நேர்முக தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும்,
அதனைத் தொடர்ந்து கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் விரும்பும் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் 60 மாணவர்கள் சேர்ந்து விளையாட்டுப் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த விடுதியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப் புர மாணவர்கள், குறிப்பாக ஏழை, எளிய ஒற்றை பெற்றோர் குழந்தைகள் தங்கி விளையாட்டுப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கையுந்து பந்து, கூடை பந்து மற்றும் தடகள் போட்டிகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் விடுதிகளில் தங்கி, அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வி கட்டணமின்றி பயின்றி வருகின்றனர். இவ்வாறு விளையாட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்குக் காலை 5.30 மணிக்கு ரோல் கால் நடைபெறும் அதனைத் தொடர்ந்து 8 மணிவரை விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பின்னர் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மாலை 5 மணி முதல் 8 மணிவரை பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். அதே போலக் காலையில் பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், இரண்டு முட்டையுடன் உணவு, மதியம் காய்கறிகள், முட்டையுடன் உணவு, இரவு அசைவ உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே போல விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான காலணி மற்றும் உடையுடான தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் அதிகளவு விளையாட்டி கவனம் செலுத்தி விளையாண்டு பதங்களைக் குவித்து வருகின்றனர். குறிப்பாகத் தற்போதைய அரசு பொருப்பேற்றது முதல் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் செஸ் ஒலும்பியான், கேலோ இந்தியா, கார் பந்தையம், உள்ளிட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.,
மேலும் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகக் கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம், ஹாக்கி மைதானம், நேரு விளையாட்டு உள் அரங்கம் மேம்பாடு பணிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கூடைப் பந்து விளையாட்டு செமி உள்ளரங்கம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பால், நேரு விளையாட்டு அரங்கம் அருகே அதிநவீன வசதிகளுடனான விளையாட்டு விடுதிக் கட்டுவதற்கான அரசாணை போடப்பட்டுள்ளது. மேலும் விடுதி மாணவருக்கு ஒரு நாள் உணவு செலவீனமாகத் தலா ரூ.250 வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்தச் செலவீனத்தை ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலையில் 3 சதவீதம் இடஒதுக்கீடு செய்ததால் விளையாட்டில் மாணவர்களுக்கான ஆர்வமும் அதிகரித்துள்ளது. கோவையில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மதுரை, நெல்லை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாணவர்களுக்குப் பல்வேறு கனவுகளுடன் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களது கனவுகளை நினைவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கோவையில் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று மாணவர்களில் கடந்த 2024 -ல் மட்டும் கையுந்து பந்து (வாலிபால்) போட்டி தேசிய அளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர்.
பீச் வாலிபால் போட்டிக்கு 2 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதே போலக் கூடைப் பந்து போட்டியில் 3 தேசிய அளவிலான பதக்கங்களைப் பெற்றுள்ளனர். தடகள போட்டிகளில் 2 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
மேலும் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தொலைக்காட்டி, வாசிங் மெசின், உள்ளிட்ட மாணவர்களுக்கான பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதால் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தயாராகி வருகின்றனர். விளையாட்டுத் துறைக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.