அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஒப்பாரி வைத்துஆர்ப்பாட்டம்..!
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தலையில் முக்காடு அணிந்தும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் 200 -க்கும் மேற்பட்ட இடங்களில் ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் ரூ.6,750 யாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறித்தி முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவையைச் சேர்ந்த சுமார் 30 பேர் கலந்து கொண்டு முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விலைவாசி அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ரூ.2,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்குவதாகவும், எம்.எல்.ஏ க்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது, காவல்துறையினர் மோப்பசக்தி இழந்த ஓய்வு பெற்ற நாய்களுக்குக் கூடப் பராமரிப்பிற்கு 8000 ரூபாய் வழங்கப்படுகிறது என்றனர்.