இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
கோவை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் கொடுத்துப் பள்ளியிலிருந்து அனுப்பி வருவதாகவும், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட செயலாளர் நிசார் அஹமத்: கோவை ரத்தினபுரி மற்றும் கணபதி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற வேண்டும், என்ற நோக்கில் சற்று கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கட்டாயமாக மாற்று சான்றிதழ் கொடுத்து அவர்களை ஐ.ஐ.டி போன்ற தொழில் கல்வி களுக்கு அனுப்பும் வேலைகளை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
இது கல்வி உரிமையைத் தடுக்கும் செயல் இதனை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கட்டாயப்படுத்தி கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.