விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண்..!
தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வெளியேறித் திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும், தவெக தொண்டர்கள்மீதும் புகார் அளித்தார்.
இதுகுறித்து வைஸ்னவி கூறியதாவது: தவெகவிலிருந்து வெளியேறியது முதல் என்னைப் பற்றித் த.வெ.க வினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இது சம்பந்தமாகத் த.வெ.கத்தலைவர் விஜய் கண்டன, அறிக்கை எதுவுமே வெளியிடவில்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள்மீது புகார் அளித்துள்ளேன் எனக் கூறினார்.
நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளைத் தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் கூறுவதாகத் தெரிவித்தார்.