செய்திகள்விளையாட்டு

மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி – ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவிகள் வாளை லாவகமாகச் சுழற்றி அசத்தல்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்..

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து 3 வது மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டுப் போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியே நடைபெற்ற போட்டியில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் எனப் பிரிவுகளில் ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன.

ஆண் போட்டியாளர்களைப் பெண் போட்டியாளர்கள் அதிக அளவில் பங்கேற்ற நிலையில் வாளை ஆவேசமாக வீரர், வீராங்கனைகள் சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.

இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு செய்ப்பட இருப்பதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகு நாகராஜ் மற்றும் தலைமை பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!