தாய்லாந்து புத்த சமூகத்தை உலுக்கிய ஒற்றைப் பெண் – துறவிகளை மிரட்டி ரூ.102 கோடி பறித்தது அம்பலம்..!
புத்த மதத்தைப் பின்பற்றி வரும் தாய்லாந்தில் மொத்தம் 2 லட்சம் துறவிகள் மற்றும் 85 ஆயிரம் பயிற்சி பெறும் துறவிகள் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் மூத்த புத்த துறவி ஒருவர் தனது துறவரத்திலிருந்து வெளியேறினார்.
மேலும் இதுகுறித்து துறவிகள் அமைப்பு விசாரித்தபோது, தன்னால் துறவரத்தை தொடர முடியாது எனவும், தான் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதால் அப்பெண் கர்ப்பமானதாகவும், இதைக் கொண்டு அப்பெண் மிரட்டி இந்திய மதிப்பில் ரூ.75 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தாய்லாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாய்லாந்து போலீசார் இதுகுறித்து விசாரிக்கத் துவங்கினர்.
அப்போது பாங்காக்கில் உள்ள சொகுசு வீட்டில் இருந்த “மிஸ் கோல்ப்” எனப் போலீசாரால் அழைக்கப்படும், வில்லேவான் எம்ஸ்வாட் என்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது வீட்டில் சோதனையிட்டபோது புத்த துறவிகளுடன் அப்பெண் தனிமையில் இருந்த சுமார் 80,000 வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மிஸ் கோல்ப் என்ற அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் 9 துறவிகளுடன் உறவு வைத்துக் கொண்டு, அவர்களை மிரட்டிப் பணம் பறித்ததும், அதன் மூலம் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.102 கோடி பெற்று, அதில் போதைப் பொருட்கள், சூதாட்டம் எனச் சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
தாய்லாந்தில் உள்ள முக்கியமான 9 துறவிகள் தங்களது கட்டுப்பாடுகளை மீறிப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதுடன் எப்படி அவ்வளவு பெரிய தொகையைப் பெண்ணுக்கு வழங்கினார், என்பது குறித்து தாய்லாந்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அதில் பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளைக் கணக்கில் காட்டாமல் அதனை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தது தெரியவந்தது.
சில துறவிகள் நீண்ட நாட்களாகப் பெண்ணுடன் தொடர்ந்து உறவில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய்லாந்து மன்னர் அதிரடியாக 9 துறவிகளின் துறவரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதோடு துறவிகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அம்சங்கள்குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதனைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பெண், 9 துறவிகளை ஏமாற்றி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டிக் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய சம்பவம், தாய்லாந்தில் ஒட்டுமொத்த புத்த சமூகத்தையே நடுங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.