போக்குவரத்து விதி மீறல் சலான் “ஆன்லைன் மோசடி” – கோவையில் 4 மாதங்களில் 42 புகார்கள்
கோவை இருகூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவரது வாட்ஸ் எண்ணுக்கு நேற்று (வியாழக்கிழமை) போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில் சிகப்பு விளக்கு சிக்னல் இருந்தபோது சலையில் சென்றதாகவும், அதற்காக ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூடுதல் தகவல்களைப் பெற அதில் உள்ள mparivhan.apk என்ற செயலியைப் பதிவிறக்க செய்யப் பார்க்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உண்மையென நம்பிய சதீஷ்குமார் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து இரண்டு தவணைகளாக ரூ.1 லட்சம் வேறு வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாகச் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போலப் போக்குவரத்து விதி மீறல் என வாட்ஸ் அப்தகவல் மற்றும் செயலிமூலம் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. மேலும் போக்குவரத்து விதிமீறல் எனக் கூறி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் கும்பல் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் இந்தப் புதிய மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.
இக்கும்பல் போக்குவரத்து விதி மீறலில் அபராதம் உள்ளதாகக் கூறி அதனை உறுதிபடுத்திக் கொள்ள mparivahan.apk செயலியைத் தாங்கள் அனுப்பும் லிங்க் மூலம் டவுன்லோடு செய்து பார்க்கலாம் எனக்கூறி செல்போன் ஹேக் செய்கின்றனர்.
பின்னர் வங்கி கணக்கை ஆய்வு செய்து ஓ.டி.பி இல்லாமலேயே பணத்தை திருடி வந்தது தெரியவந்ததுள்ளது. பெரும்பாலும் இந்தக் கும்பல் வட மாநிலம், மற்றும் வட கிழக்கு மாநிலங்ளிலிருந்து இயக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதுவரை ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பல்வேறு மோசடி சம்பவங்களை இந்தக் கும்பல் செய்து வந்துள்ளது. இதன் மூலம் மட்டுமே பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீபகாலமாகப் போக்குவரத்து விதிமீறல் அபராதம் என்ற பெயரில் செயலியை அனுப்பி அதன் மூலம் ஆன்லைன் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர்.
பொதுமக்கள் பிளே ஸ்டோரில் மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாட்ஸ் மற்றும் போன் குறுஞ்செய்திமூலம் ஏ.பி.கேச்செயலிகளைப் பதிவறக்கம் செய்ய வேண்டாமெனச் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக இந்தப் போக்குவரத்து விதிமீறல் என்ற ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இதுவரை கோவை மாநகரில் மட்டுமே 42 புகார்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.