தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலர் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,
உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜேக்டோ ஜியோ ) அமைப்பினர் பணியைப் புறக்கணித்துக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருவே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜேக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.வீரமணி, தமிழக ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தங்கராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிவாஷ், செந்தில்குமார், தங்கராசு, சிவக்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சி.அரசு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனைப் பல முறை வலியுறுத்தியுள்ளோம். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைகள்மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.