Top Storiesஅரசியல்

கூட்டணி ஆட்சியில் உரிமையை வெல்வோம் – அன்புமணி ராமதாஸ் பதிவு…!

அதிமுக – பாஜக கூட்டணி இடையே கடந்த சில தினங்களாகப் பேசு பொருளாகி வருவது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அதிமுக தலைமையிலான ஆட்சியா? என்பது தான். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா 4 ஆவது முறையாகக் கூட்டணி ஆட்சியெனக் கூறிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சி தான் அமையும் எனக் கூறி வருகிறது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தலைவர் அன்புமணி கூட்டணி ஆட்சியில் ஆட்சியில் உரிமை பெருவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

பாமக 37 -ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்! மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று.

சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்குத் தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட.

அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!