Lifestyleவிளையாட்டு

உடல் பருமன் சாதனைக்கு ஒரு தடையல்ல – யோகாவில் சாதித்த சிறுவன்

கோவை ஆவராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி, கணேஷ் தம்பதியரின் மகன் பிரணவ். அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.

பிரணவ் தனது வயதிற்கு மீறிய உடல் எடை இருந்தும் யோகாவில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் 56 கிலோ எடை கொண்ட 9 வயதான சிறுவன் பிரணவ் யோகாவில் புதிய உலக சாதனை செய்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அதன் படி கோவை பீளமேடு ஓலோஜி வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் எட்டு அடி உயரம் கொண்ட டவரின் மீது ஏறிய சிறுவன், தனது உடல் எடையையும் பொருட்படுத்தாமல் அர்த்த சமக்கோண ஆசனத்தைத் தொடர்ந்து ஒரு நிமிடத்தில் 15 முறை செய்து அசத்தியுள்ளார்.

சாதரணமாக அமர்ந்து மட்டுமே செய்யக்கூடிய அர்த்த சமக்கோண ஆசனத்தைத் தொடர்ந்து பதினைந்து முறை எழுந்து நின்று மீண்டும் அமர்ந்து செய்த சிறுவனின் இந்தச் சாதனையைக் கண்காணித்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலைஸ் ராய்னாட் சிறுவனுக்கு யூனியன் உலக சாதனை புத்தகத்தின் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கிக் கவுரவித்தார்.

சிறுவனின் விடாமுயற்சியை கண்ட சக மாணவர்கள், ஆசிரியர்கள் பிரணவின் சாதனையைப் பாராட்டிக் கைகளைத் தட்டி உற்சாகபடுத்தினர்.

உடல் பருமனாக இருந்தாலும் சாதனைக்கு எதுவும் தடையல்ல என்பதை கூறும் விதமாகத் தனது விடா முயற்சி, உறுதியுடன், நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் செய்த இந்த உலக சாதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!