மதிவதனி குறித்து அவதூறு கருத்து – நாம் தமிழர் ஆதரவாளர் கைது
திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக யூடியூப்- இல் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாரங்கபாணி என்பவரைக் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி. தமிழ் தேசியவாதியான இவர் நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் YouTube சேனலில் திராவிடர் கழக துணை பொதுசெயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக, அறுவறுக்க தக்க வகையில் பேட்டியளித்து இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாகக் கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பிரபாகரன் , கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.கடலூரை சேர்ந்த சாராங்கபாணி ஒசூரில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கோவையிலிருந்து ஒசூர் சென்ற தனிப்படையினர் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான சாரங்கபாணியை கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.