கோவையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாயிகளுக்குக் கனிமவளக்கொள்ளை என்ற பெயரில் போடப்பட்ட அபராத தொகைகளை ரத்துச் செய்ய வலியுறுத்தித் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொண்டாமுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள்மீது போலீஸார் கனிமவளக் கொள்ளை என்ற பெயரில் அபராதம் கட்ட நிர்பந்தம் செய்வதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் விவசாயிகள்மீது கனிமவளகொள்ளை என்ற பெயரில் அபராதம் விதிக்கும் போலீஸாரின் நடவடிக்கை கைவிடக் கோரியும், இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில் மைதானத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தாமோதிரன், விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலநது கொண்டனர். மேலும் காவல் துறையினரை கண்டித்து கண்டன கோசங்களையும் எழுப்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது : கடந்த 4 மாதங்களாகக் கனிமவளங்களை விவசாயிகள் கொள்ளையடிப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் மட்டுமே சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள் உள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதரத்தை கடுமையாகப் பாதிக்கிறது.
கோவை மாவட்டத்தைப் பொருத்தவறை ஒரு புறம் வன விலங்குகள் தொல்லை, மற்றொரு புறம் வறட்சியென விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சமூக ஆர்வலர்கள் எனக்கூறி சிலர் நீதிமன்றம் சென்று கொடுக்கும் தவறான தகல்களை கொடுத்து, விவசாயிகளைக் குற்றவாளிகள்போலக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இதைக் கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.