LifestyleTop Storiesதமிழ்நாடு

”வேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவையில் தான் – விஜய பதிப்பகம் நிறுவனர்

வேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவை மாவட்டத்தில் தான் என்பது பெருமையளிக்கிறது என விஜய பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார். 

சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” புத்தகம் 1 லட்சம் பிரதி விற்பனையானதை கொண்டாடும் விதமாக, நேற்று சென்னையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிக பிரதிகள் விற்பனையான கோவை விஜய பதிப்பகத்திற்கு விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

இதுகுறித்து பேசிய விஜய பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம்:

பிரபல திரைப்படங்கள் வெளியாகும்போது இத்தனை கோடி வசூல் எனச் சொல்லப்படுவதுண்டு., புத்தகத்துறையில் அப்படி சொல்ல முடியாது.  ஆனால் பொன்னியின் செல்வன், அக்னி சிறகுகள், போன்ற சில புத்தகங்கள் அதிக பிரதிகள் விற்பனையான நிலையில், “வேள்பாரி” புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.

2,000 ரூபாய் விலையில் 1 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.  இதற்கான சிறப்பு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் எங்களைச் சிறப்பித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாசகர்களுக்கு நன்றி இந்தப் புத்தகம் அப்படிபட்ட பொக்கிஷத்தை உள்ளடக்கியதுள்ளது.

வேள்பாரிக்கான அதிக வாசகர்களைப் பெற்றது கோவை மாவட்டம், கொங்கு மண்டலத்தில் தான் அதிக விற்பனையானது என்பது ஒரு சிறப்பு எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!