கோவையில் சிபிஎம் கட்சி வழக்கறிஞர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம்!
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்களுக்கான அரசியல் பயிற்சி முகாமை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார்.
கோவை மருதமலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்களுக்கான இரண்டு நாள் அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த அரசியல் பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய சிபிஎம் வழக்கறிஞர் பிரிவு அகில இந்திய துணை தலைவர் முத்து அமுதநாதன்:
கோவையில் நடைபெறும் வழக்கறிஞர்களுக்கான அரசியல் பயிற்சி முகாமில் அனைத்து மாவட்டங்களிலிருந்து வந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய நாட்டின் இறையான்மை மற்றும் அரசியல் அமைப்பைப் பாதுகாக்கவும், மத சார்பற்ற தன்மை உருவாக வேண்டும் என்பதற்காகப் பயிற்சி இது. இதனை மையப்படுத்தி கட்சியின் கொள்கைகள் விளக்கும் வகையில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு, நாட்டின் அரசியலமைப்பு பாதுகாப்பு குறித்து விளக்கமளிப்பார்கள் எனக் கூறினார்.