எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் நேரம் மாற்றம்!
எா்ணாகுளத்தில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் டாடா நகருக்கு இயக்கப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து நாள்தோறும் காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190) பகல் 12 மணிக்கு போத்தனூா், 12.55 மணிக்கு திருப்பூா், 1.45 மணிக்கு ஈரோடு, 2.45 மணிக்கு சேலம், மாலை 5 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும் விதமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் அரை மணி நேரம் முன்னதாக 6.45 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் காலை 11.30 மணிக்கு போத்தனூா், நண்பகல் 12.15 மணிக்கு திருப்பூா், 1.15 மணிக்கு ஈரோடு, 2.15 மணிக்கு சேலம், மாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டை நிலையத்தைச் சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.