இ.எஸ்.ஐ. மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்..!
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். `
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள், இன்றைய தேதிவரை தங்களது சம்பளங்களை பெறவில்லையெனவும், பழிவாங்கும் நோக்கத்துடன் முதல்வர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய தொழிலாளர்கள், தங்களது உரிமைகளைக் கோரி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மருத்துவமனையின் முக்கிய பணிகளைச் செய்யும் இத்தொழிலாளர்கள் பணியிலிருந்து விலகியதால், நோயாளிகளுக்குச் சேவை தடையின்றி வழங்கப்படுமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. சம்பள விவகாரத்தில் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமெனப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்